Home உலகம் உடல் பருமனாக இருந்தால் கூடுதல் விமான கட்டணம்

உடல் பருமனாக இருந்தால் கூடுதல் விமான கட்டணம்

430
0
SHARE
Ad

overweight-passenger1(C)ஓஸ்லோ, ஏப்ரல் 18 – குண்டான உடல்வாகு கொண்ட விமான பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நார்வேயைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பொருளாதார நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். உடல் பெருத்த பயணிகளால் ஏற்படும் பல்வேறு கூடுதல் சுமைகளைக் குறைக்கும் வகையில் இந்த யோசனையை அவர் கூறியுள்ளார். அதாவது கூடுதல் எரிபொருள், கூடுதல் கார்பன் டை ஆக்சைடு உமிழ்தல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு ஆகியவற்றை இதன் மூலம் சமாளிக்க முடியும் என்பது இவரின் வாதமாகும். பரத் பட்டா என்ற பொருளாதார நிபுணர் இதனை தெரிவித்துள்ளார்.