Home One Line P1 சொக்சோ பங்களிப்பு விகிதம் உயர்த்தப்படலாம்- சரவணன்

சொக்சோ பங்களிப்பு விகிதம் உயர்த்தப்படலாம்- சரவணன்

609
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 (சட்டம் 4) கீழ் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்பு (சொக்சோ) பங்களிப்புகளை மக்களுக்கு சுமையில்லாமல் உயர்த்துவதன் அவசியத்தை மனிதவள அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.

1971- ஆம் ஆண்டிலிருந்து, இந்நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டிலிருந்து பங்களிப்பு வீதத்தை உயர்த்தவில்லை என்றும், முறைசாரா துறை உட்பட அனைத்து வேலைத் துறைகளிலிருந்தும் பங்களிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் தனது அமைச்சகம் கண்டறிந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.

“மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதால் (சொக்சோ பங்களிப்புகளின்) நன்மைகளைப் பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்கள். ஒரு சிறிய அதிகரிப்புக்கு வழங்கினால், அது மக்களுக்கு சுமையாக இருக்காது. இதனை 1 ரிங்கிட் அல்லது 2 ரிங்கிட்டிற்கு அதிகரிக்கலாம்.

#TamilSchoolmychoice

“1971 முதல் இன்று வரை, மொத்த பங்களிப்புகள் 100 விழுக்காட்டிற்கும் மேலாக உயர்ந்துள்ளன, ஆனால் நாம் விகிதத்தை உயர்த்தவில்லை. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தியபோது, ​​மலேசியர்களுக்கு அதிக அளவு பங்களிப்பு செய்த துறைகளில் சொக்சோவும் ஒன்றாகும், ” என்று அவர் கூறினார்.

ஊழியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாட்டின் மிகச் சிறந்த நிறுவனம் சோக்சோவுக்கு பங்களிக்க மலேசியர்களை சரவணன் கேட்டுக்கொண்டார். இதுவரை, சொக்சோ 2.72 மில்லியனுக்கும் அதிகமான பங்களிப்பாளர்களுக்கு பயனளித்துள்ளதாக அவர் கூறினார்.