Home One Line P1 “முகக் கவசம் அணியாத மொகிதின்” – நஜிப் கேள்விக் கணை

“முகக் கவசம் அணியாத மொகிதின்” – நஜிப் கேள்விக் கணை

581
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பில் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறையை பிரதமர் மொகிதின் யாசினே மீறியிருக்கிறார் என நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

மொகிதின் இரண்டு அளவைகளுக்கான கொவிட் தடுப்பூசியைப் பெற்றிருக்கிறார். இருந்தாலும், தடுப்பூசியைப் பெற்றவர்கள் கூட கட்டாயம் முகக் கவசத்தை பொது இடங்களில் அணிய வேண்டும் என சுகாதாரத் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாமும், கொவிட் தடுப்பூசி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடினும் ஏற்கனவே அறிவித்திருக்கின்றனர்.

“சில நாட்களுக்கு முன்னர் நான் ஓர் உணவகம் ஒன்றுக்குள் மைசெஜாதரா செயலியில் பதியாமல் நான் சென்றதற்காக குறை கூறப்பட்டேன். ஆனால், முகக் கவசம் அணிந்திருந்தேன். ஆனால் இப்போது முகக் கவசம் அணியாமல் பிரதமரே சென்றிருக்கிறார். அவர் மைசெஜாதரா செயலியையும் பயன்படுத்தினாரா என்பதையும் விசாரிக்க வேண்டும்” என நஜிப் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“மைசெஜாதரா செயலியை நான் பயன்படுத்தாத காரணத்திற்காக நான் அதனை ஒப்புக் கொண்டு, எனக்கு அபராதம் விதியுங்கள் என்றும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதன்படி காவல் துறையினர் என்னை விசாரித்தனர்” என்றும் தன் பதிவில் தெரிவித்திருக்கிறார் நஜிப்.