Home One Line P2 ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரி சோதனை

ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரி சோதனை

623
0
SHARE
Ad

சென்னை : திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, அவரின் கணவர் சபரீசன் தங்கியிருக்கும் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02 ஏப்ரல் 2021) வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தினர்.

சோதனைகள் தற்போது (இந்திய நேரப்படி காலை மணி 11.00) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதைத் தொடர்ந்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் கார்த்திக் மோகன் இல்லத்திலும் வருமானவரி சோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

கார்த்திக் மோகனின் தந்தையான மோகன் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணா நகர் தொகுதியில் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிடுகின்றார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)