Home இந்தியா இந்தியாவில் சிபிஎஸ்இ – பிளஸ் 2 தேர்வுகள் இரத்து – மோடி அறிவிப்பு

இந்தியாவில் சிபிஎஸ்இ – பிளஸ் 2 தேர்வுகள் இரத்து – மோடி அறிவிப்பு

533
0
SHARE
Ad

புதுடில்லி – கொவிட்-19 பாதிப்புகளின் காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கொவிட்-19 தாக்கங்களின் காரணமாக தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாகவும் மாணவர்களின் உடல்நலத்திலும் பாதுகாப்பிலும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் மோடி தெரிவித்தார்.

அண்மையக் காலமாக இந்தியாவில் கொவிட்-19 தொற்றுப் பரவல் கடுமையாகியுள்ளது. இதைத் தொடர்ந்து 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒத்திவைத்தது. பல மாநிலங்களிலும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து அந்தத் தேர்வுகள் இரத்து செய்யப்படுவதாக மோடி அறிவித்தார்.

இதற்கிடையில் கொவிட்-19 தடுப்பூசிகளும் போதிய அளவில் கிடைக்கவில்லை என மாநில அரசாங்கங்களும் குறை கூறியிருந்தன.

தமிழ் நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு தடுப்பூசி போடப்படுவது நிறுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்தது. எனினும் இன்று மாலை புதிய தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்ததைத் தொடர்ந்து தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடரும் என்றும் தமிழ் நாடு அரசாங்கம் அறிவித்திருக்கிறது.