Home நாடு மலேசிய வான்வெளியில் அத்துமீறி நுழைந்த சீனா போர் விமானங்கள்

மலேசிய வான்வெளியில் அத்துமீறி நுழைந்த சீனா போர் விமானங்கள்

638
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சீனாவின் விமானப் படையைச் சேர்ந்த 16 இராணுவ விமானங்கள் ஒன்றாக இணைந்து மலேசிய வான்வெளியில் பறந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து மலேசியாவின் அரச மலேசிய விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் சீனாவின் விமானங்களைத் தடுத்து நிறுத்த முற்பட்டன.

லுக்கோனியா ஷோல்ஸ் (Luconia Shoals) எனப்படும் பெத்திங் பத்திங்கி அலி பகுதியில், சரவாக் கடல் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

#TamilSchoolmychoice

எனினும் சீனாவின் போர்விமானங்கள் மலேசிய விமானங்களின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் கடந்து சென்றன.

அரச மலேசிய விமானப் படையின் அறிக்கை ஒன்று இந்த விவரங்களைப் புகைப்பட, வரைபடத் தரவுகளோடு வெளியிட்டது.