Home நாடு நஜிப் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் கூட்டரசு நீதிமன்றத்தில் தோல்வி

நஜிப் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் கூட்டரசு நீதிமன்றத்தில் தோல்வி

798
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கின் மேல்முறையீட்டில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தார்.

தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான 4 நீதிபதிகள் கொண்ட அமர்வு புதிய, கூடுதல் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தனர்.

பேங்க் நெகாராவின் முன்னாள் ஆளுநர் செத்தி அக்தார் அசிஸ் குடும்பத்தினர் தொடர்பான வங்கி விவரங்களை நஜிப் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முற்பட்டார். இந்த ஆதாரங்களை முதலில் விசாரிக்க வேண்டும் என்றும் அதன் பின்னரே தன் தண்டனை மீதான மேல்முறையீடு விசாரிக்கப்பட வேண்டும் என நஜிப் மனு ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.

#TamilSchoolmychoice

கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் நஜிப்புக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விதித்திருந்த தண்டனையை மறுஉறுதிப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து நஜிப் கூட்டரசு நீதிமன்றத்திற்கு தன் மேல்முறையீட்டைச் சமர்ப்பித்திருக்கிறார்.

எனினும், கூட்டரசு நீதிமன்றம், நஜிப்பின் மேல்முறையீட்டுக்கான தேதியை இன்னும் நிர்ணயிக்கவில்லை.