Home கலை உலகம் ஆஸ்ட்ரோ ‘வைரஸ்’ தொடர் குழுவினருடன் சிறப்பு நேர்காணல்

ஆஸ்ட்ரோ ‘வைரஸ்’ தொடர் குழுவினருடன் சிறப்பு நேர்காணல்

666
0
SHARE
Ad

அண்மையில் ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில் (202) வில் ஒளிபரப்பான ‘வைரஸ்’ தொலைக்காட்சித் தொடர் இரசிகர்களிடையே பரவலான பாராட்டைப் பெற்றது. அந்தத் தொடரில் பணியாற்றிய கலைஞர்களுடன் நடத்தப்பட்ட நேர்காணல்:

வதனி குணசேகரன், இயக்குநர்:

1. வைரஸ் தொடரை இயக்கியதற்கான உங்களின் சில உத்வேகங்கள் யாவை?

தொற்றுநோய்க் காலக்கட்டத்தின் போது நம்மில் பலர் பல போராட்டங்களை எதிர்கொண்டோம். அவ்வகையில், மருத்துவ முன்களப் பணியாளர்கள் எதிர்கொண்டத் தடைகளையும் போராட்டங்களையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வைரஸ் தொடரின் மூலம் மருத்துவ முன்களப் பணியாளர்கள் எதிர்கொண்டச் சவால்களை வெளிக்கொணர நான் உத்வேகம் பெற்றேன்.

#TamilSchoolmychoice

2. வைரஸ் தொடரை இயக்கிய உங்களின் குறிப்பிடத்தக்க நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

முழுப் படப்பிடிப்பும் 44 நாட்களுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. அவை பல ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டிருந்தது. எனவே, படப்பிடிப்பின் இறுதி நாள் குறிப்பிடத்தக்க நினைவகம் என்றுதான் நான் கூறுவேன். மன அழுத்தம் முடிந்தாலும், படப்பிடிப்பில் ஈடுபட்ட அனைவரையும் நான் நிச்சயமாக மிஸ் செய்வேன். “இது தொடருக்கான முடிவாகும்” என்று நான் கத்தியப்போது எனக்கு மிகவும் கடினமான நிவாரணமாக இருந்தது.

தீபன் கோவிந்தசாமி & டிஷாலெனி ஜாக், நடிகர்கள்:

1. வைரஸ் தொடரில் நீங்கள் வகித்தக் கதாப்பாத்திரத்தைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்க.

தீபன்: டாக்டர் கிரிஷ் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தேன். அவர் எளிமையானப் பிண்ணனியிலிருந்து வந்த, சட்டத்தை மதிக்கும் ஒரு மருத்துவர். டாக்டர் கிரிஷின் தந்தை அவரை மருத்துவப் பள்ளியில் சேர்க்க எண்ணற்றத் தியாகங்களைச் செய்த தனித்து வாழும் ஒரு தந்தை. சவாலானச் சூழலில் வளர்ந்ததால், டாக்டர் கிரிஷ் தனது வாழ்க்கையை ஏழைகளுக்கு உதவ அர்ப்பணித்தார்.

டிஷாலெனி: கண்ணுக்குத் தெரியாத எதிரியான வைரஸை எதிர்த்துப் போராடிய அர்ப்பணிப்புக் குணம் கொண்ட முன்களப் பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் டாக்டர் அவந்திகாவாக நான் நடித்தேன். அவர் ஒரு தைரியமான, நம்பிக்கையான, அக்கறையுள்ள, அச்சமற்றப், பொறுப்பான மற்றும் பகுத்தறிவுள்ள நபர். அவரிடமுள்ளப் பண்புகளே அவரது கதாப்பாத்திரத்தில் நடிக்க என்னைத் தூண்டியது. டாக்டராக நடிப்பதைத் தவிர, வலுவானப் பெண் வேடங்கள் கொண்டத் தொடரில் முன்னணிக் கதாப்பாத்திரத்தில் நடித்தது, என் தோள்களில் அதிகச் சுமை இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

2. வைரஸ் தொடரில் நடித்த உங்களின் அனுபவம் எவ்வாறு இருந்தது?

தீபன்: நான் எங்கிருந்து தொடங்குவது! வைரஸ் என்னுடைய முதல் நாடகம். இந்தக் கதாப்பாத்திரத்தை ஏற்றுக் கொள்வதற்கான எனது முடிவில் பெரும் தாக்கத்தை இயக்குநர், வதனி ஏற்படுத்தினார். இந்தத் தொடர் சற்று நரம்பிழைக்கும் வேலையாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால், படப்பிடிப்பிடத்தில் இருந்த அனைவரும் என்னை மிகவும் வரவேற்றனர். வைரஸ் தொடர் படப்பிடிப்பில் இருந்தபோது நான் மற்றொருத் திரைப்படத்திற்கானப் படப்பிடிப்பிலும் இருந்தேன். எனது        படப்பிடிப்பு அட்டவணை மிகவும் இறுக்கமாக இருந்த போதிலும், வதனி மற்றும் அவரதுக் குழுவினர் மிகவும் உதவிகரமாக இருந்தனர். எனக்குப் போதுமான ஓய்வு இருப்பதை உறுதிச் செய்வதற்காக வைரஸ் படப்பிடிப்பின் அட்டவணையில் எனது வசதிக்கேற்ப மாற்றங்களைச் செய்தனர். இடையில் போதுமான உறக்கம் இல்லாமல் தொடர்ந்து 2 நாட்கள் படப்பிடிப்பில் ஈடுபட்டத் தருணங்களும் உண்டு. எனது காட்சிகளுக்காகக் காத்திருக்கும் தருணத்தில் என் கண்கள் சற்று ஓய்வெடுக்க வசதியான இடத்தை ஒப்பனைக் கலைஞர்களான ஜோஷ் மற்றும் டேரன் தயார் செய்தனர். இது ஓர் அழகான அனுபவம்.

டிஷாலெனி: எனது முந்தைய நிகழ்ச்சிகளைக் காட்டிலும் இந்த அனுபவம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. மருத்துவத் தொடரில் ஒரு மருத்துவராக நடித்தது மிகவும் சவாலானதாக இருந்தது. கதாப்பாத்திரத்தைச் சிறப்பாக நடிக்க பல முன்னேற்பாடுகள் தேவைப்பட்டன. மருத்துவக் கருவிகளைப் பயன்படுத்துதல், நடைமுறைகளைச் செயல்படுத்துதல், நோயாளிகளுடன் உரையாடுதல், உடல் மொழி, பிபிஇ உடைகளை அணிதல் மற்றும் அகற்றுதல், மணிக்கணக்கில் N95 முகக்கவசத்தை அணிதல் மற்றும் பலவற்றில் எங்களுக்கு வழிகாட்டவும் பயிற்சி அளிக்கவும், முன் தயாரிப்பு மற்றும் படப்பிடிப்பின் போது நிபுணத்துவமிக்க மருத்துவர்கள் எங்களுடன் இருந்தனர். கதாப்பாத்திரங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சித்தரிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இம்முயற்சி கையாளப்பட்டது. டிஃபிபிரிலேட்டரை (defibrillator) நோயாளியின் மீது வைப்பதற்கு முன் எலெக்ட்ரோட் ஜெல்லை (electrode gel) அதில் தேய்ப்பது போன்ற திரைப்படங்களில் பரவலாகச் சித்தரிக்கப்பட்டப் பொதுவான மருத்துவத் தவறுகள் மற்றும் பலவற்றை சுட்டிக் காட்டி இம்மருத்துவர்கள் எங்களுக்கு வழிக்காட்டினர். டாக்டர் அவந்திகாவின் கதாப்பாத்திரத்தை நான் சிறப்பாக நடிப்பதை உறுதிசெய்ய வதனி குணசேகரன், இயக்குநர், ராஜ்ஹஷுரியன் குணசேகரம், எழுத்தாளர் மற்றும் டாக்டர் திவ்யா தினா, சான்றளிக்கப்பட்ட மருத்துவர் ஆகியோர் எனக்குத் தொடர்ந்து வழிகாட்டினார்கள்.