Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : பிப்ரவரி 14 முதல் ஒளிபரப்பு காணும் உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகள் – விளையாட்டு...

ஆஸ்ட்ரோ : பிப்ரவரி 14 முதல் ஒளிபரப்பு காணும் உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகள் – விளையாட்டு நிகழ்ச்சி ‘காதல் கேபே’ – காதல் டெலிமூவி ‘அபூர்வ காதல்’

488
0
SHARE
Ad

பிப்ரவரி 14 ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்பு காணும் பல உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள்!
விளையாட்டு நிகழ்ச்சி ‘காதல் கேபே’ – காதல் டெலிமூவி ‘அபூர்வ காதல்’

கோலாலம்பூர்:விளையாட்டு நிகழ்ச்சி காதல் கேபே மற்றும் காதல் டெலிமூவி அபூர்வ காதல் உள்ளிட்ட பிப்ரவரி 14, முதல் ஒளிபரப்பாகும் மேலும் அதிகமான உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகளை டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

புகழ்பெற்ற உள்ளூர் திறமையாளர்களான விகடகவி மகேன், வனேசா குரூஸ் ஆகியோர் தொகுத்து வழங்கும் காதல் கேபே எனும் இவ்வுள்ளூர் தமிழ் விளையாட்டு நிகழ்ச்சி, சமூக ஊடகப் பிரபலங்களும் நிஜ வாழ்க்கை ஜோடிகளுமான ரேய்னேஷ் மற்றும் மிம்மி; நாஷ்வின், நிகித்தா, வர்மா, துர்கா ஆகியோரைத் தாங்கி மலரும்.

ஜோடிகள் தங்கள் காதல் கதைகளைப் பகிர்ந்துக் கொள்வதோடு, பொய் கண்டறிதல் சோதனை, திரைப்படக் காதல் காட்சிகளை மீண்டும் நடித்தல் போன்ற பலவற்றை உள்ளடக்கியப் பல்வேறு வேடிக்கையானப் பணிகளிலும் ஈடுப்படுவர்.

#TamilSchoolmychoice

அதுமட்டுமின்றி, திருமணமான முதிய நிஜ வாழ்க்கைத் தம்பதிகள் தங்கள் காதல் – திருமண உறவைப் பற்றி இவ்விளம் ஜோடிகளுடன் பகிர்ந்துக் கொள்வதோடு இவர்களுக்குச் சில மதிப்புமிக்க ஆலோசனைகளையும் வழங்குவர். காதல் கேபே, பிப்ரவரி 14, இரவு 9.30 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

கூடுதலாக, ஜீ குட்டி, சுபாஷினி அசோகன், மோகன் ராஜ் மற்றும் நண்டு ரமேஷ் ஆகியோர் நடித்துள்ள அபூர்வ காதல் என்ற உள்ளூர் தமிழ் காதல் டெலிமூவியையும் வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்க்கலாம். தனது துயரமானக் கடந்தக் காலத்தால் திருமணத்தில் நம்பிக்கை இல்லாத இளம் மருத்துவரான ரோஜாவின் மீதுக் காதல் வயப்படும் அபூர்வன் என்றக் குள்ள மனிதனை, உள்ளூர் திறமையாளரான ஜெய்கிஷனால் இயக்கப்பட்ட இந்த டெலிமூவிச் சித்தரிக்கிறது. இருப்பினும், விதி அபூர்வனையும் ரோஜாவையும் திருமண உறவில் இணைக்கிறது. ஆனால், ரோஜா அவர்களின் திருமணத்திற்குப் பிறகு அபூர்வனைப் பற்றிய மோசமான ஒன்றைக் கண்டறிகிறார். அபூர்வன் தனது திருமண உறவை எப்படி நிலைநிறுத்துகிறார், அந்தத்  தம்பதிகளிடையேக் காதல் மலர்கிறதா என்பதுதான் கதையின் மையக்கருவாக அமைகிறது.

அபூர்வ காதல், பிப்ரவரி 14, இரவு 10 மணிக்கு, ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

மேல் விபரங்களுக்கு, content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.