Home நாடு வல்லினம் – யாழ் பரிசளிப்பு விழா – 2023

வல்லினம் – யாழ் பரிசளிப்பு விழா – 2023

1369
0
SHARE
Ad

வல்லினம் & யாழ் பரிசளிப்பு விழா – 2023

வல்லினம் மற்றும் யாழ் இணைவில் பரிசளிப்பு விழா ஒன்று மார்ச் 18 இல் நடைப்பெற உள்ளது. கடந்த ஆண்டு வல்லினம் குழுமம் அக்கினி சுகுமார் அறிவியல் சிறுகதை போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்தது.

அதே சமயம் யாழ் பதிப்பகம் மூலம் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சிறுகதை போட்டி ஒன்றும் தேசிய அளவில் நடத்தப்பட்டது. எழுத்தாளர் ம.நவீன், அ.பாண்டியன், கி. இளம்பூரணன் ஆகியோர் திட்டமிடலில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.

இவ்விரு போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்குப் பரிசளிக்கும் விழா மார்ச் 18 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டத்தோஸ்ரீ ஆ.தெய்வீகன் தலைமை ஏற்கும் இந்நிகழ்ச்சியில் பி.எம்.மூர்த்தி, ம.நவீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுவர்.

#TamilSchoolmychoice

யாழ் சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெறும் மாணவருக்கு 1000 ரிங்கிட்டுடன் தங்கப் பதக்கம் ஒன்றும் அணிவிக்கப்பட உள்ளது. மேலும் இரண்டாவது மூன்றாவது பரிசு பெறுபவர்களுக்கு 750 ரிங்கிட், 500 ரிங்கிட் என முறையே வழங்கப்படும் சூழலில் ஏழு பேருக்கு ஆறுதல் பரிசாக 300 ரிங்கிட் வழங்கப்படும்.

அக்கினி சுகுமார் அறிவியல் சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூவருக்கு முறையே 2500 ரிங்கிட், 1500 ரிங்கிட், 1000 ரிங்கிட் என வழங்கப்படுகிறது. அக்கினி சுகுமார் அவர்களின் துணைவியாரின் வாழ்த்துரையோடு இந்நிகழ்ச்சி தொடங்கும்.

மதியம் 2 மணிக்கு, கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நடைபெறும் இந்தப் பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள முன் பதிவு அவசியம் என்பதால் 016-3194522 என்ற எண்ணில் ம. நவீனைத் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யலாம்.