Home இந்தியா ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழ் நாடு பாஜக முன்னாள் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் நியமனம்

ஜார்கண்ட் மாநில ஆளுநராக தமிழ் நாடு பாஜக முன்னாள் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் நியமனம்

693
0
SHARE
Ad

புதுடில்லி : தமிழ் நாடு பாஜகவின் முன்னாள் தலைவரான சி.பி இராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வந்தவருமாவார்.

அவரின் நியமனத்திற்கு தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன்” என ஸ்டாலின் தன் முகநூலில் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

தமிழ் நாடு பாஜக தலைவர்கள் தமிழிசை சௌந்திரராஜன், இல.கணேசன் ஆகியோர் ஏற்கனவே மற்ற மாநில ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அந்த வரிசையில் 3-வது பாஜக தலைவராக சி.பி.இராதாகிருஷ்ணன் இணைந்துள்ளார்.