Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : தமிழ் பயண விளையாட்டு நிகழ்ச்சி ‘பயணம்@ஐலட்’ விண்மீன் (அலைவரிசை 202)-இல் ஒளிபரப்பு

ஆஸ்ட்ரோ : தமிழ் பயண விளையாட்டு நிகழ்ச்சி ‘பயணம்@ஐலட்’ விண்மீன் (அலைவரிசை 202)-இல் ஒளிபரப்பு

474
0
SHARE
Ad

உள்ளூர் தமிழ் பயண விளையாட்டு நிகழ்ச்சி ‘பயணம்@ஐலட்’ ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் முதல் ஒளிபரப்புக் காணுகிறது

கோலாலம்பூர் : பிப்ரவரி 10, இரவு 9 மணி முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ – ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு கண்டு வருகிறது, பயணம்@ஐலட் எனும் உள்ளூர் தமிழ் பயண விளையாட்டு நிகழ்ச்சி. ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் நிகழ்ச்சி இதுவாகும்.

விளையாட்டு நிகழ்ச்சியின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு ஜோடி போட்டியாளர்களான, ஓர் உள்ளூர் தொலைக்காட்சிப் பிரபலமும் ஒரு சமூக ஊடகப் பிரபலமும் வெற்றியாளராக முடிசூடப் பல்வேறுப் பணிகளில் ஒருவருக்கொருவர் எதிர்த்துப் போட்டியிடுவர்.

தேவகுரு சுப்பையா, சாந்தினி கோர், நித்யா ஸ்ரீ, ஸ்ரீ குமரன் முனுசாமி, கபில் கணேசன் மற்றும் பலரை உள்ளிட்டத் திறமையான உள்ளூர் கலைஞர்கள் மற்றும் சைரியா, பிரின்சஸ் மீதி, தகீட்ஸ், ஜென்னா சங்கீதா, மாலதி சிவகாமி என பலரை உள்ளிட்டச் சமூக ஊடகப் பிரபலங்கள் ஆகியோர் போட்டியாளர்களாவர்.

#TamilSchoolmychoice

உள்ளூர் திரைப்பட இயக்குநர் லோயேஸ்வரன் மகாலிங்கத்தால் இயக்கப்பட்டப் பயணம்@ஐலட் புகழ்பெற்ற உள்ளூர் திறமையாளரான சீலன் மனோகரனால் தொகுத்து வழங்கப்படும். 12 அத்தியாயங்களில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் பங்கோர் தீவு, ரெடாங் தீவு, தீயோமான் தீவு, லங்காவி தீவு, பெர்ஹென்டியன் தீவு உள்ளிட்ட வெவ்வேறு உள்ளூர் தீவுகளில் வெவ்வேறு ஜோடிப் போட்டியாளர்கள் போட்டியிடுவர்.

பயணம்@ஐலட் நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு வெள்ளி இரவு 9 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டுக் களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.