Home கலை உலகம் ராகா : ‘பேய் டைரி’ சீசன் 4 உள்ளூர் அமானுஷ்ய ஒலிப்பதிவுத் தரவை SYOK- இல்...

ராகா : ‘பேய் டைரி’ சீசன் 4 உள்ளூர் அமானுஷ்ய ஒலிப்பதிவுத் தரவை SYOK- இல் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

543
0
SHARE
Ad

*‘பேய் டைரி’ சீசன் 4 உள்ளூர் தமிழ் அமானுஷ்ய ஒலிப்பதிவுத் தரவை SYOK- இல் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

*SYOK செயலி அல்லது ராகா அகப்பக்கத்தின் வாயிலாக ஸ்ட்ரீம் செய்யுங்கள்

ராகாவில் ‘பேய் டைரி’ சீசன் 4-ஐப் பற்றினச் சில விவரங்கள்:

#TamilSchoolmychoice

• SYOK செயலி அல்லது அகப்பக்கம் மற்றும் ராகா அகப்பக்கத்தின் வாயிலாகப் ‘பேய் டைரி’ சீசன் 4 எனும் பிரபலமான உள்ளூர் தமிழ் அமானுஷ்யம் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒலிப்பதிவுத் தரவு (போட்காஸ்) தொடரை மலேசியர்கள் இப்போது பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யலாம்.

• உள்ளூர் திறமையாளரான, லிங்கேஸ்வரன் மணியம் தான் தனிப்பட்ட முறையில் அனுபவித்த உண்மையான அமானுஷ்யச் சந்திப்புகளைப் பகிர்ந்துக் கொள்ளும் 10 மாய அத்தியாயங்களைச் சீசன் 4 சித்தரிக்கும். ‘பேய் டைரி’ சீசன் 4-இன் முதல் நான்கு அத்தியாயங்களை இரசிகர்கள் இப்போது பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யலாம்.

• உள்ளூர் அமானுஷ்யப் புலனாய்வாளர், டிவி தொகுப்பாளர், தொகுப்பாளர், நடிகர், சமூக ஆர்வலர் மற்றும் SYOK Anugerah Podcast 2022 விருது வெற்றியாளர், லிங்கேஸ்வரன் தமது அனுபவங்களை விவரிப்பதை இரசிகர்கள் கேட்டு மகிழலாம்.

• SYOK செயலி அல்லது ராகா அகப்பக்கத்தின் வாயிலாகப் ‘பேய் டைரி’ சீசன் 4-இன் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு வியாழக்கிழமையும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

‘பேய் டைரி’ சீசன் 4-இன் அத்தியாயங்கள் மற்றும் கதைச்சுருக்கங்கள்

அத்தியாயத் தலைப்பு

கதைச்சுருக்கம் & ஒலிபரப்பு விபரங்கள்

அத்தியாயம் 1: ஷாமன் தொலைந்துப் போன ஆன்மாக்களைக் கைப்பற்றிச் சூனியத்திற்கு உதவச் செய்யும் ஒரு ஷாமனுடனானத் தனது உரையாடலை லிங்கேஸ்வரன் பகிர்ந்துக் கொண்டார்.

இப்போதே SYOK செயலி அல்லது raaga.my-இல் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யுங்கள்

அத்தியாயம் 2: தந்தையின் ஆவி தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து ஒரு குடும்பம் பல அமானுஷ்யச் சந்திப்புகளை அனுபவித்தது. பிறந்தக் குழந்தை யாரோத் தன்னுடன் விளையாடுவதுப் போலத் தானேச் சிரிக்கவும் அழவும் தொடங்கியது. அக்குழந்தையின் சகோதரி என்ன நடக்கிறது என்று பார்க்கச் சென்றபோது, அவர் கண்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இப்போதே SYOK செயலி அல்லது raaga.my-இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள்

அத்தியாயம் 3: இறக்காதவர்களின் ஜாடி கெடாவின் யான் புறநகரில் கைவிடப்பட்டக் கல்லறையில் ஒரு மேம்பாட்டுத் திட்டம் நடந்துக் கொண்டிருந்தது. அப்போதுச் சிவப்புத் துணியால் மூடப்பட்டப் பலப் பானைகள் மற்றும் ஜாடிகள் உட்ப்படப் புதைக்கப்பட்டிருந்தப் பலப் பொருட்கள் கட்டுமானத் தொழிலாளர்களால் தோண்டி எடுக்கப்பட்டன. அத்துமீறி நுழைந்தச் சிறுவர்களின் குழு ஜாடியை உடைத்து உள்ளடக்கங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றபோது அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கத் தொடங்கின.

இப்போதே SYOK செயலி அல்லது raaga.my-இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள்

அத்தியாயம் 4: தோயோலின் பொறி சிறுதொழிலைத் தொடங்கிய ஒரு தம்பதியினர் தங்களுடையப் பணம் மர்மமான முறையில் காணாமல் போகத் தொடங்கியதை உணர்ந்தனர். மேலும் அவர்கள் வீட்டில் அடிக்கடி விசித்திரமானத் தொந்தரவுகளை அனுபவித்தனர். தம்பதியரின் குழந்தைத் தனது அறையில் ஒரு விசித்திரமான உருவம் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதாகக் கூறியப்போது விஷயங்கள் தீவிரமாகத் தொடங்கின. பயந்துப்போனத் தம்பதிகள் விசித்திரமான நிகழ்வுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுப்பிடிக்க ஒரு சடங்கை நாடினர்.

இப்போதே SYOK செயலி அல்லது raaga.my-இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள்

அத்தியாயம் 5: இறந்தவர்களை அழைத்தல் வீட்டில் தனியே விட்டுச் சென்றப் போது தாய் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்ததால் அவரின் குழந்தைகள் குற்ற உணர்வில் வாடினர். எனவே, அவரிடம் மன்னிப்புக் கேட்க விரும்பினர். ஓர் ஊடகத்தின் வழிகாட்டுதலின் பேரில், தங்கள் தாயைத் தொடர்புக்கொள்ளும் முயற்சியில் அக்குடும்பம் அறியாமலேயே ஓர் அழையா விருந்தினரைத் தங்கள் வீட்டிற்குள் அழைத்தனர்.

ஏப்ரல் 27, 2023 முதல் SYOK செயலி அல்லது raaga.my-இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள்

அத்தியாயம் 6: ஜாதகம் & பச்சைக் குத்தல்கள் தனது அதிர்ஷ்டம் படிக்கப்பட்டப் பிறகுத் தனது அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்க முதுகுத் தண்டின் மீது ஒரு சிறப்புப் பச்சைக் குத்திக்கொள்ளும்படி ஜேனுக்கு அறிவுறுத்தப்பட்டது. பச்சைக் குத்திய ஒரு வாரத்திற்குப் பிறகு ஜேன் மாய நிகழ்வுகளை அனுபவிக்கத் தொடங்கினார்.

மே 4, 2023 முதல் SYOK செயலி அல்லது raaga.my-இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள்

அத்தியாயம் 7: சன்தாவ்: ஓர் அமானுஷ்ய அனுபவம் குழப்பமானக் கனவுகள் மட்டுமல்லாமல் பசியின்மை மற்றும் வாந்தி இருந்தப்போதிலும் மருத்துவரால் நோயைக் கண்டறிய இயலாதத் தனது அனுபவத்தை ஓர் உள்ளூர் பெண் பிரபலம் பகிர்ந்துக் கொண்டார். நிழல்கள் மற்றும் இருண்ட உருவங்களைப் பார்க்கத் தொடங்கியதால், அவைச் சன்தாவ் மந்திரத்தின் விளைவாக இருக்கும் என்று அவர் நம்பினார்.

மே 11, 2023 முதல் SYOK செயலி அல்லது raaga.my-இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள்

அத்தியாயம் 8: தாமரை பிறப்பு பிறந்தக் குழந்தையின் தொப்புள் கொடியைத் தானாக உதிர விடுவது தாமரை பிறப்பு எனப்படும். உலர்ந்தத் தொப்புள் கொடியை முறையாக அப்புறப்படுத்துவது அவசியம் என்று கூறப்படுகிறது. பெர்லிஸில் அமைந்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தாய் தனது குழந்தைகளின் தொப்புள் கொடிகளைக் கொண்ட ஒரு பையைத் தொலைத்தார். இது தீயக் கனவுகள், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு வழிவகுத்தது. அவரது உறவினர் சூனியத்திற்காகத் தொப்புள் கொடிகளைப் பயன்படுத்தியதாக அவர் கூறினார். இதனால் தனதுக் குழந்தைகள் உறங்கும் போது ஓர் இருண்ட உருவம் அவர்கள் மீது ஊர்ந்துச் சென்றதாகக் கூறினார்

மே 18, 2023 முதல் SYOK செயலி அல்லது raaga.my-இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள்

அத்தியாயம் 9: வேட்டையாடும் ஆவிகள் 90களின் முற்பகுதியில் சர்வதேச நிறுவனத்தின் ஊழியர்கள், அவர்களது நிறுவனம் வாடகைக்கு எடுத்தக் கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள மூன்று மாடிக் கட்டிடத்தில் தங்கினர். பாதுகாப்பற்ற உணர்வு, விரும்பத்தகாத ஒலிகள் மற்றும் வாசனைகளை மற்றும் அமானுஷ்ய நடவடிக்கைகளை எதிர்கொள்வது போன்ற அசாதாரணமான மற்றும் சங்கடமானச் சம்பவங்களை அவர்கள் அனுபவித்தனர். அந்தக் கட்டிடத்தில் ஆவிகள் வசிப்பதாக நம்பப்பட்டது.

மே 25, 2023 முதல் SYOK செயலி அல்லது raaga.my-இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள்

அத்தியாயம் 10: ஜினின் சாபம் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஓர் அரசக் குடும்பத்தினருக்குச் சொந்தமான ஒரு புதையல் வெளிப்படுத்தப்படாத உள்ளூர் இடத்தில் புதைக்கப்பட்டதாகவும் ஒரு ஜின்னால் அப்புதையல் பாதுகாக்கப்படுவதாகவும், அவர்கள் உரிமை கோருவதற்காக அது இன்னும் காத்திருப்பதாகவும் நம்பப்பட்டது. அந்த இடத்திற்குச் சென்ற மக்கள், ஒற்றைக் கண் கொண்டப் பெரிய உருவத்தைப் பார்த்ததாகக் கூறுகின்றனர். அவர்கள் விசித்திரமான நிகழ்வுகள், மனநோய் மற்றும் பலவற்றையும் அனுபவித்திருக்கிறார்கள்.

ஜூன் 1, 2023 முதல் SYOK செயலி அல்லது raaga.my-இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள்

‘பேய் டைரி’ சீசன் 4- ஐப் பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

வானொலியில் கேளுங்கள்

இடம்                                         அதிர்வெண்கள்

கிள்ளான் பள்ளத்தாக்கு             99.3FM
அலோர்ஸ்டார்                         102.4FM
பினாங்கு                                   99.3FM
ஈப்போ                                       97.9FM
சிரம்பான்                                  101.5FM
மலாக்கா                                    99.7FM
ஜொகூர் / ஜேபி                         103.7FM
தைப்பிங்                                  102.1FM
லங்காவி                                  101.9FM
ஆஸ்ட்ரோ அலைவரிசை                859