Home கலை உலகம் ‘மிஸ்டர் & மிஸ் ராகா’ போட்டியின் வெற்றியாளர்களை ராகா அறிவித்தது

‘மிஸ்டர் & மிஸ் ராகா’ போட்டியின் வெற்றியாளர்களை ராகா அறிவித்தது

504
0
SHARE
Ad

*‘மிஸ்டர் & மிஸ் ராகா’ போட்டியின் வெற்றியாளர்களை ராகா அறிவித்தது

*தேவேஷ் த/பெ சிவகுமார் ‘மிஸ்டர் ராகா’ பட்டத்தை வென்றார் மற்றும் கிறிஸ்டி த/பெ சூசை ‘மிஸ் ராகா’ பட்டத்தை வென்றார்

‘மிஸ்டர் & மிஸ் ராகா’ போட்டியின் வெற்றியாளர்கள்

• ஏப்ரல் 20, 2023 கோலாலம்பூரில் அமைந்துள்ள மிட் வேலி கண்காட்சி மையத்தில் நடைபெற்ற இறுதிச் சுற்றைத் தொடர்ந்து, மிஸ்டர் & மிஸ் ராகா எனும் மெய்நிகர் அழகுப் போட்டியின் வெற்றியாளர்களை ராகா அறிவித்தது.

#TamilSchoolmychoice

வெற்றியாளர்களான தேவேஷ் த/பெ சிவகுமார் மற்றும் கிறிஸ்டி த/பெ சூசை ஆகியோர் முறையே மிஸ்டர் ராகா மற்றும் மிஸ் ராகா என முடிசூட்டப்பட்டனர், தலா 3,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் சென்றனர்.

• தேவேஷ், மிஸ்டர் ராகா வெற்றியாளர் கூறுகையில், “பெற்றோரின் மகிழ்ச்சியை விட எந்த வெற்றியும் பெரிதல்ல. தங்களின் வற்றாத ஆதரவை வழங்கிய அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பயிற்சி, முயற்சி, தொடர்ச்சி, வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சி” என்றார்.

கிறிஸ்டி, மிஸ் ராகா வெற்றியாளர் கூறுகையில், “இந்த இலக்கை அடைய எனக்கு உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பிய மற்றும் ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் என்னால் முடிந்ததைத் தொடருவேன் என்று நம்புகிறேன்” என்றார்.

• தேவேஷ் சிவகுமார், ஜெகதேஷ் மணிமோகன், பிரவீன் ஆறுமுகம், கதிர் பழனியாண்டி மற்றும் சிரஞ்சீவி கருப்பையா ஆகியோர் மிஸ்டர் ராகா பிரிவிலும் கிறிஸ்டி சூசை, திவியா வெற்றிவேல், கேசினி முரளீதரன், திவ்ய தர்ஷினி சுகுமாறன் மற்றும் கங்காதேவி ஆதி நாயுடு ஆகியோர் மிஸ் ராகா பிரிவிலும் அதிக வாக்குகளைப் பெற்ற இறுதிப் போட்டியாளர்களாவர். இந்தப் பத்து இறுதிப் போட்டியாளர்கள் 18வது குளோபல் இந்தியன் பெஸ்டிவலில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் கிரீடங்களுக்காகப் போட்டியிட்டனர்.

• மேல் விபரங்களுக்கு ராகா அகப்பக்கத்தை வலம் வாருங்கள்

‘மிஸ்டர் & மிஸ் ராகா’ பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

வானொலியில் கேளுங்கள்