Home உலகம் மொரோக்கோ : மீண்டும் 2-வது முறையாக நிலநடுக்கம்

மொரோக்கோ : மீண்டும் 2-வது முறையாக நிலநடுக்கம்

489
0
SHARE
Ad

ரபாத் (மொரோக்கோ) : ஏற்கனவே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொரோக்கோ நாட்டின் மரகேஷ் நகரில் மீண்டும் 4.5 ரிக்டர் அளவிலான அதிர்வுகள் உணரப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்காக மொராக்கோவில் மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் 2,012 பேர் கொல்லப்பட்டதாகவும், 2,059 பேர் காயமடைந்ததாகவும், 1,404 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

வெள்ளிக்கிழமை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் அதிர்வுகள் தொடருமென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் மொரோக்கோவுக்கு தேவையான உதவிகளை மலேசியா வழங்குமென மலேசிய வெளியுறவு அமைச்சர் சாம்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் மலேசியா மொரோக்கோவின் மீட்புப் பணிகளில் உதவ தயாராக இருக்கிறது என அறிவித்துள்ளார். அங்குள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களின் நலன்களை மலேசிய அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் அன்வார் அறிவித்தார்.