Home இந்தியா ஜி-20 நாடுகளின் தலைவர்கள் காந்தி சமாதியில் அஞ்சலி

ஜி-20 நாடுகளின் தலைவர்கள் காந்தி சமாதியில் அஞ்சலி

421
0
SHARE
Ad

புதுடில்லி : வழக்கமாக இந்தியாவுக்கு வருகை தரும் அயல்நாட்டுத் தலைவர்கள் புதுடில்லியில் ராஜ்காட் என்னும் இடத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு வருகை தந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது பாரம்பரிய நடைமுறையாகும்.

பல தலைவர்கள் சுயமாகவே தாங்களாகவே முன்வந்து, மகாத்மா காந்தியின் மீது கொண்ட மரியாதையினால் தங்களின் இந்திய வருகை அட்டவணையில் காந்தி சமாதிக்கான வருகையை இணைத்துக் கொள்வது வழக்கமாகும்.

கடந்த இரண்டு நாட்களாக புதுடில்லியில் நடைபெற்ற ஜி-20 என்னும் 20 முக்கிய நாடுகளின் தலைவர்களின் உச்சநிலை மாநாட்டின் நிறைவாக அனைத்து தலைவர்களும் ஒரே நேரத்தில் ஒன்றுகூடி மகாத்மா காந்தி சமாதியில் நேற்று திங்கட்கிழமை (செப்டம்பர் 10) மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

#TamilSchoolmychoice

அனைத்துத் தலைவர்களும் கால்களில் காலணிகள் இல்லாமல் காந்தியின் சமாதிக்கு வருகை தந்ததும் இந்திய பாரம்பரியத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

இரண்டு ஜி-20 மாநாடு ஆப்பிரிக்க ஒன்றியத்தையும் இந்த முறை இணைத்துக் கொண்டுள்ளது.

இந்த மாநாட்டில் இந்தியாவின் பெயர் பாரத் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால், இந்தியா இனி பாரத் எனப் பெயர் மாற்றம் காணுமா என்ற சர்ச்சை இந்தியாவிலும் அனைத்துலக அளவிலும் பல விவாதங்களை எழுப்பியுள்ளது.

அடுத்த ஜி-20 மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெறும்.