Home நாடு சிம்பாங் ஜெராம் இறுதி நிலவரம் : பக்காத்தான் 13,844 – பெரிக்காத்தான் 10,330 – சுயேட்சை...

சிம்பாங் ஜெராம் இறுதி நிலவரம் : பக்காத்தான் 13,844 – பெரிக்காத்தான் 10,330 – சுயேட்சை 311

464
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 9) நடைபெற்ற ஜோகூர் மாநிலத்தின் சிம்பாங் ஜெராம் சட்டமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான்  வேட்பாளர் ஹாஜி நஸ்ரி (அமானா) 13,844 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் டாக்டர் மாஸ்ரி யாஹ்யா 10,330 – வாக்குகள் பெற்றார். சுயேட்சை வேட்பாளர் ஜெகநாதன் 311  வாக்குகள் பெற்றார்.

இதைத் தொடர்ந்து பக்காத்தான் வேட்பாளர் 3,514 பெரும்பான்மையில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

பூலாய், சிம்பாங் ஜெராம் தேர்தல் முடிவுகள் பக்காத்தான்-தேசிய முன்னணி இணைந்த வலிமையை ஜோகூரில் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.