Home நாடு பூலாய் இறுதி நிலவரம் : பக்காத்தான் 48,283 – பெரிக்காத்தான் 29,642 – சுயேட்சை 528

பூலாய் இறுதி நிலவரம் : பக்காத்தான் 48,283 – பெரிக்காத்தான் 29,642 – சுயேட்சை 528

298
0
SHARE
Ad
சுஹைசான் காயாட்

ஜோகூர் பாரு : இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஜோகூர் மாநிலத்தின் பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான் வெற்றி பெற்றது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இடைத் தேர்தல் வாக்கு விவரங்கள் பின்வருமாறு:-

பக்காத்தான் ஹாரப்பான் சுஹைசான் காயாட் – 48,283
பெரிக்காத்தான் நேஷனல் சுல்கிப்ளி ஜஃபார் – 29,642
சுயேட்சை வேட்பாளர் சம்சுடின் முகமட் பவுசி –
528
பெரும்பான்மை வாக்குகள் – 18
,641

பூலாய் தொகுதியில் பக்காத்தான் தேசிய முன்னணி கட்சிகளின் ஆதரவுடன் மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றாலும் 15-வது பொதுத் தேர்தலில் பெற்ற பெரும்பான்மையை விட இது குறைவே ஆகும்.

கடந்த 15-வது பொதுத் தேர்தலில் சலாஹூடின் அயூப் 33,174 வாக்குகள் பெரும்பான்மை பெற்றார். இந்த முறை வாக்குகளின் பெரும்பான்மை 18,641 ஆகக் குறைந்துள்ளது.

#TamilSchoolmychoice

அதே வேளையில் வாக்களிப்பு விழுக்காடும் பெருமளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த முறை மாலை 5.00 மணிவரை 50 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்தனர்.