Home Video சந்திரமுகி -2 : வேட்டையன் ஆட்டம் செப்டம்பர் 15-இல் தொடக்கம்! முன்னோட்டம் வெளியீடு!

சந்திரமுகி -2 : வேட்டையன் ஆட்டம் செப்டம்பர் 15-இல் தொடக்கம்! முன்னோட்டம் வெளியீடு!

806
0
SHARE
Ad

சென்னை : அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று சந்திரமுகி 2. தமிழ்ப் படங்களில் மிக நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடி சாதனை புரிந்த தியாகராஜ பாகவதரின் ‘ஹரிதாஸ்’ பட சாதனையை முறியடித்த படம் ரஜினியின் சந்திரமுகி.

அந்தப் படத்தை இயக்கிய பி.வாசு 17 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகியின் 2-ஆம் பாகத்தை ராகவா லாரன்சை கதாநாயகனாகக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்.

சந்திரமுகியாக வருபவர் இந்திப் படவுலகின் அழகு மயில் கங்கனா ரணாவத். எதிர்வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியீடு காண்கிறது இந்தப் படம்.

#TamilSchoolmychoice

சந்திரமுகியில் நடித்த வடிவேலு இந்தப் படத்திலும் நடிக்கிறார் என்பது படத்தின் கூடுதல் ஈர்ப்புகளில் ஒன்று.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் சந்திரமுகி 2 படத்தின் முன்னோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: