Home இந்தியா ஸ்டாலின் தடுக்கி விழ – தாங்கிப் பிடித்த மோடி!

ஸ்டாலின் தடுக்கி விழ – தாங்கிப் பிடித்த மோடி!

463
0
SHARE
Ad
மு.க.ஸ்டாலின் – கோப்புப் படம்

சென்னை : அண்மையக் காலமாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலம் குன்றியிருக்கிறார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் அவரின் தங்கை கனிமொழி முன்னின்று நடத்திய சங்கமம் நிகழ்ச்சியில் முரசு ஒன்றை அடித்து விட்டு அவர் நகர்ந்தபோது, அவரின் விரல்களும் கரமும் நடுக்கத்தைக் காட்டியது தெரிந்தது.

இன்று வெள்ளிக்கிழமை கெலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைக்க மோடி சென்னைக்கு வருகை தந்தார். அந்த நிகழ்ச்சியில் மோடியுடன் இணைந்து நடந்து வந்து கொண்டிருந்த ஸ்டாலின் திடீரென ஓரிடத்தில் தடுமாறிக் கீழே விழுவது போல் காட்சியளித்தார். அருகில் நெருக்கமாக வந்து கொண்டிருந்த மோடி உடனடியாக அவரைத் தாங்கிப் பிடித்தார்.

இந்த காட்சி காணொலியாக எல்லா சமூக ஊடகங்களிலும் பரவி வருகிறது.