Home நாடு நஜிப் வீட்டுக் காவல்: அரச உத்தரவு சேர்க்கை மீது அரசாங்கம் தடை உத்தரவு கோருகிறது!

நஜிப் வீட்டுக் காவல்: அரச உத்தரவு சேர்க்கை மீது அரசாங்கம் தடை உத்தரவு கோருகிறது!

85
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: தனக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை நஜித் துன் ரசாக் இனி வீட்டிலேயே கழிக்கலாம் என முன்னாள் மாமன்னர் சுல்தான் அப்துல்லா வழங்கிய அரச உத்தரவு சேர்க்கை தொடர்பில் யாரும் விவாதிக்கவோ, எழுதவோ, பேசவோ கூடாது என அரசாங்கத்தின் சார்பில் சட்டத்துறை அலுவலகம் நீதிமன்றத்தில் மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) இதனை நஜிப்பின் வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வழக்கில் ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும், எந்த செய்தியையும் பதிப்பிக்கவோ, அறிவிக்கபவோ, பரப்பவோ, விநியோகிக்கவோ கூடாது என அரசாங்கம் தனது மனுவில் கோரியுள்ளது.

#TamilSchoolmychoice

முன்னாள் மாமன்னரின் அரச உத்தரவு சேர்க்கை தொடர்பாக பொதுமக்களிடையே தவறான புரிதல்கள், விவாதங்கள் எழுவதைத் தடுக்கவும் அதன் காரணமாக, ஆரூடங்கள், கேள்விகள், சவால்கள் விடுக்கப்படுவது, மாமன்னரின் அதிகாரம் குறித்து அவமதிப்பு செய்வது போன்ற அம்சங்களைத் தவிர்க்கவும் அதன் காரணமாக, மாமன்னர் தலைமை வகிக்கும் அரச மன்னிப்பு வாரியத்தின் முடிவுகள், அதிகாரங்கள், செயல்கள் குறித்த நேர்மையும், தகுதியும் பாதிப்படையாமல் இருப்பதற்காகவும் இத்தகைய மனு சமர்ப்பிக்கப்படுவதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் இத்தகைய உத்தரவை வழங்கினால், அதன் பின்னர் இனி நஜிப்பின் வீட்டுக் காவல் விவகாரம் தொடர்பில் பொதுமக்களும், ஊடகங்களும் பகிரங்கமாக விவாதிக்க முடியாது.