நெதர்லாந்து நாட்டின் அரசியாக பீட்ரிக்ஸ், 33 ஆண்டுகளாக அரியணையில் இருந்தார். தற்போது 75 வயதாகும், பீட்ரிக்ஸ், உடல் நிலையை காரணம் காட்டி, தனது மகனுக்கு முடி சூட்டுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, 46 வயதான வில்லெம் அலெக்சாண்டர், ஆம்ஸ்டர்டாம் நகரில், அரசராக நேற்று முடி சூட்டப்பட்டார்.
இதற்கான ஒப்பந்தத்தில், அரசி பீட்ரிக்ஸ் கையெழுத்திட்டார். நெதர்லாந்தில், 1890ம் ஆண்டுக்கு பிறகு, தற்போது தான், மன்னர் பொறுப்பேற்கிறார்.
Comments