Home கலை உலகம் அரசியலில் சேர விருப்பம் இல்லை- நடிகர் ஷாருக்கான் பேட்டி

அரசியலில் சேர விருப்பம் இல்லை- நடிகர் ஷாருக்கான் பேட்டி

593
0
SHARE
Ad

shah-rukhமும்பை, மே 1- அரசியலில் விருப்பம் இல்லை என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கூறினார். ஷாருக்கான் அளித்த பேட்டி ஒன்றில் அரசியலில் சேருவீர்களா? என்ற கேள்விக்கு, “நினைத்த உடனேயே நான் அரசியல்வாதி ஆக முடியாது.

அது ஒரு தொழில். அதற்காக முதலில் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்  என்று பதிலளித்துள்ளார். எனினும் உடனடியாக அவர் சுதாரித்துக் கொண்டு தான் கூறியது குறித்து விளக்கம் அளித்தார்.

“அரசியலை ஒரு தொழில்போல மோசமாக நான் பார்க்கவில்லை. அரசியலை நான் தாழ்வாக கூறவில்லை. என்னைக் கேட்டால், அரசியலில் சேர நினைப்பதும், ஒரு விண்வெளி வீரர் ஆக விரும்புவதும் ஒன்றுதான்.

#TamilSchoolmychoice

நடிப்பு ஒன்றுதான் எனக்கு பொருத்தமாக இருக்கும். அதைத்தான் இதுநாள்வரையில் நான் செய்து வருகிறேன். எனக்கு எது பொருந்துகிறதோ அதை மட்டும் செய்வதே நல்லது என்று நினைக்கிறேன்.

அதுவும் கூட சில சமயங்களில் கேள்விக்குரியதாகி விடுகிறது. உண்மையில் சொல்வதென்றால் அரசியலில் எனக்கு விருப்பமே இல்லை” என்றார்.