Home 13வது பொதுத் தேர்தல் புக்கிட் மெலாவாத்தி தொகுதியில் மாணிக்கவாசகம் தோல்வி

புக்கிட் மெலாவாத்தி தொகுதியில் மாணிக்கவாசகம் தோல்வி

593
0
SHARE
Ad

Manicka-Kapar-Sliderகோலசிலங்கூர், மே 7- கோலசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற தொகுதியில்  பிகேஆர் சார்பாகப் போட்டியிட்ட முன்னாள்  காப்பார்  நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகம், தேசிய முன்னணி வேட்பாளர்  ஜாக்கிரானிடம் 806 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவித் தழுவியுள்ளார்.

வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதல் இறுதி வரை முன்னிலை வகித்த மாணிக்கவாசகம், கடைசி நிமிடங்களில்  806 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

மாணிக்கவாசகம் பெற்ற வாக்குகள் 6, 490. ஜாக்கிரானுக்கு கிடைத்த வாக்குகள் 7, 296 ஆகும்.