Home நாடு மலாக்காவின் புதிய மந்திரி பெசாராக இட்ரிஸ் ஹாரோன் இன்று பதவி ஏற்றார்

மலாக்காவின் புதிய மந்திரி பெசாராக இட்ரிஸ் ஹாரோன் இன்று பதவி ஏற்றார்

630
0
SHARE
Ad

Untitled-1

மலாக்கா, மே 07 – மலாக்காவின் புதிய மந்திரி பெசாராக அம்னோ உச்ச அமர்வு மன்றத்தின் உறுப்பினரான இட்ரிஸ் ஹாரோன் இன்று பதவி ஏற்றார்.

இதற்கு முன் அம்மாநில மந்திரி பெசாராக  கடந்த 14 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த முகமட் அலி ருஷ்டாம், 13 ஆவது பொதுத்தேர்தலில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக இட்ரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று காலை மலாக்கா ஆளுநர் கலீல் யாக்கோப் முன்னிலையில் இட்ரிஸ் ஹாரோன், மலாக்கா மந்திரி பெசாராக பதவி ஏற்பதாக உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.

தங்கா பத்து நாடாளுமன்ற தொகுதி அம்னோ தலைவரான இட்ரிஸ், பொதுத்தேர்தலில் சுங்கை ஊடாங் சட்டமன்ற தொகுதியில்  தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் அஸ்ரி பின் புவாங்கைவிட 9,000 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.