Home நாடு ஆசிரியர்களுக்காக “அன்புள்ள ஆசிரியர்களே” நூலை சரவணன் வழங்கினார்

ஆசிரியர்களுக்காக “அன்புள்ள ஆசிரியர்களே” நூலை சரவணன் வழங்கினார்

422
0
SHARE
Ad

மலாக்கா :தமிழ் நாட்டின் பிரபல கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா எழுதிய நூல் “அன்புள்ள ஆசிரியர்களே”. அந்த நூலை மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் மலாக்கா மாநில ஆசிரியர்களுக்கு இலவசமாக வழங்கினார்.

“இனிய நண்பரும், கவிஞருமான மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் எழுதிய “அன்புள்ள ஆசிரியர்களே” எனும் நூலை, மலாக்காவில் பாலர்பள்ளி, தொடக்கப்பள்ளி, இடைநிலைப் பள்ளிகளில் உள்ள இந்திய ஆசிரியர்களுக்கு இலவசமாக வழங்கினோம். ஆசிரியப் பணி அறப்பணி.. அதில் ஏற்படும் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும் இந்த புத்தகத்தில் தெளிவாகப் பதியப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் மன உளைச்சலைத் தீர்க்கும் நூலாகவும் இந்த நூல் அமையும் என்பதில் சந்தேகமில்லை. சீர்மிகு சமுதாயத்தை உருவாக்க ஆசிரியர்களின் சேவை தொடரட்டும்” என இந்த நூல் வழங்கப்பட்டது தொடர்பில் தன் முகநூல் பக்கத்தில் சரவணன் பதிவிட்டார்.