Home நாடு மலாக்கா புதிய முதல்வர் அப்துல் ரவுஃப் தலைமையில் புதிய ஆட்சிக் குழு

மலாக்கா புதிய முதல்வர் அப்துல் ரவுஃப் தலைமையில் புதிய ஆட்சிக் குழு

619
0
SHARE
Ad
அப்துல் ரவுஃப் யூசோ,

மலாக்கா : மலாக்கா மாநிலத்தின் முதலமைச்சர் சுலைமான் அலி பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அப்துல் ரவுஃப் யூசோ அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து மலாக்கா மாநிலத்தில் புதிய ஆட்சிக் குழு பதவியேற்கவிருக்கிறது.

மலாக்கா மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்படும் என்ற ஆரூடங்கள் நிலவுகின்றன. மஇகா சார்பில் கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பி.சண்முகம் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மலாக்காவில் வேறு இந்திய சட்டமன்ற உறுப்பினர் யாரும் இல்லாததால் அவரே இந்திய சமூகத்தின் சார்பில் ஆட்சிக் குழு உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணியும், பக்காத்தான் ஹாரப்பானும் தற்போது இணைந்து மத்திய அரசாங்கத்தை அமைத்துள்ளதால், அந்த இரு கூட்டணிகளும் இணைந்து மலாக்காவில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.