Home நாடு நஜிப் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு : 4-1 பெரும்பான்மையில் மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது

நஜிப் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு : 4-1 பெரும்பான்மையில் மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது

702
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்டத் தண்டனையை எதிர்த்தும், தனக்கு கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வாதங்களைச் சமர்ப்பிக்க முறையான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சமர்ப்பித்த மறு சீராய்வு மனு மீதான தீர்ப்பை இன்று வெள்ளிக்கிழமை காலை கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியது.

5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் சார்பில் நீதிபதி வெர்னோன் ஓங் வழங்கிய அந்தத் தீர்ப்பின்படி 4-1 பெரும்பான்மையில் நஜிப்பின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் காஜாங் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு தன் தண்டனையை அனுபவிப்பார்.

#TamilSchoolmychoice

அந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  1. வழக்கை ஒத்தி வைப்பதா இல்லையா என்பது முழுக்க முழுக்க நீதிமன்றத்தின் முடிவாகும்.
  2. மேல்முறையீட்டில் நிகழ்ந்த குளறுபடிகளுக்கும் துரதிர்ஷ்டத்திற்கும் முழுக்க முழுக்க நஜிப்பே காரணமாகும்.
  3. நஜிப்பின் வழக்கறிஞர் ஹிஷாத் தே போக் தெய்க் வழக்கிலிருந்து விலகிக்கொள்வதா இல்லையா என்பதை நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும்.
  4. நஜிப் வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாதது தலைமை நீதிபதி தெங்கு மைமுன் செய்த சரியான முடிவாகும்.