Home Photo News பச்சை பாலன் நூல் வெளியீட்டு விழா – 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கி 3 நூல்களைப்...

பச்சை பாலன் நூல் வெளியீட்டு விழா – 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கி 3 நூல்களைப் பெற்ற சரவணன்

1007
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 26-ஆம் தேதி மாலை பிரபல எழுத்தாளரும் முன்னாள் ஆசிரியருமான ந.பச்சை பாலனின் 3 நூல்களின் வெளியீட்டு விழா தலைநகர் மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று பச்சை பாலனின் நூல்களை வெளியிட்டு டத்தோஸ்ரீ சரவணன் உரையாற்றினார்.

மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தனதுரையில், “இலக்கியத்தைக் கையிலெடுக்கும் போது உள்ளத்தில் ஒருவித மகிழ்ச்சி உண்டாகும். ஆனால் அது மட்டுமே இலக்கியம் அல்ல. எழுத்தாளனின் நோக்கம், சமுதாயச் சிக்கல்களை அடையாளம் கண்டு, தீர்வுகளை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். ஆசிரியர் ந.பச்சைபாலனின் முரண், நூல்களின் நகரம், மனக்கண் எனும் 3 படைப்புகளிலும் அதை முழுமையாகக் காண முடிந்தது.. ” எனக் கூறினார்.

#TamilSchoolmychoice

“படைப்புகள் தற்போதைய சூழலுக்கு ஏற்ற வண்ணம், இளைஞர்களையும் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும். இலக்கியம் படித்தால் மட்டுமே மொழிப்பற்று உண்டாகும். மொழியின் மேல் மோகமும், இலக்கியத்தின் மேல் தாகமும் ஏற்படுத்தும் படைப்புகளைத் தொடர்ந்து படைப்பாளர்கள் படைக்க வேண்டும்” என்றும் சரவணன் தனதுரையில் குறிப்பிட்டார்.

பச்சை பாலனின் 3 நூல்களையும் 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கி பெற்றுக் கொள்வதாகவும் சரவணன் அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் காவல் துறையின் முன்னாள் ஆணையர் டத்தோஸ்ரீ தெய்வீகன் ஆறுமுகமும் சிறப்புரையாற்றினார்.

அந்த நிகழ்ச்சியின் படக் காட்சிகளை இங்கே காணலாம்: