Home அரசியல் “சிலாங்கூர் மந்திரி பெசார் நியமனத்தில் வான் அஸிசா தன்மூப்பாக செயல்படுகிறார்” – அஸ்மின் அலி அதிருப்தி

“சிலாங்கூர் மந்திரி பெசார் நியமனத்தில் வான் அஸிசா தன்மூப்பாக செயல்படுகிறார்” – அஸ்மின் அலி அதிருப்தி

634
0
SHARE
Ad

Untitled-1

பெட்டாலிங் ஜெயா, மே 11 – சிலாங்கூர்  மாநில மந்திரி பெசாராக யாரை நியமிப்பது என்று அம்மாநில பிகேஆர் கட்சியைச் சேர்ந்த எந்த ஒரு முக்கியத் தலைவர்களிடம் கருத்து கேட்காமல், கட்சித் தலைவரான வான் அஸிசா வான் இஸ்மாயில் மீண்டும் காலிட் இப்ராஹிமின் பெயரை முன்மொழிந்து,அதற்கான கடிதத்தையும் அரண்மனைக்கு அனுப்பிவிட்டதாக துணைத் தலைவரான அஸ்மின் அலி தனது அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ” மந்திரி பெசார் பதவி நியமனம் கருத்துக்களின் அடிப்படையிலோ அல்லது விருப்பத்தின் பேரிலோ செய்யப்படுவதில்லை.  அதற்காக  அம்மாநில கட்சி தலைவர்களுக்குக்  கூட தெரியாமல், தேர்ந்தெடுத்த நபரின் பெயரை அரண்மனைக்கு அனுப்புவது முறையற்ற செயல் என்றே நான் கருதுகிறேன்.

#TamilSchoolmychoice

சம்பந்தப்பட்ட மாநில  நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்து அவர்களிடம் கருத்துக்களை கேட்டு பின், மந்திரி பெசார் பதவிக்கு பொருத்தமான தலைவரை தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது. ஆனால் அதை கட்சித் தலைவரான வான் அஸிசா செய்யத் தவறிவிட்டார் ” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தான் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் ஆக முடியாத வருத்தத்தில் கட்சியை விட்டு விலகப்போவதாக பலர் கூறி வருகின்றனர் என்று கூறிய அஸ்மின் அலி,  ஒருபோதும் பிகேஆரை விட்டு விலக மாட்டேன் என்று உறுதியளித்துள்ளார்.