காபூல், மே 20- ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
அப்போது ஆப்கான் ராணுவத்தை வலிமை படுத்த மேலும் இந்தியாவின் உதவிகளை வேண்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சமீபத்தில் பாகிஸ்தான், ஆப்கானிடையே எல்லையில் நிலவிய பதட்டம் குறித்தும் விவாதிக்கப்படும். பின்னர் அவர் பாகிஸ்தான் செல்லவுள்ளார்.
இது பாகிஸ்தானுக்கு எரிச்சலை உண்டாக்கும் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் வந்த கர்சாய் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.