Home இந்தியா ஐபிஎல் சூதாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண்

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி பிரசாந்த் சரண்

598
0
SHARE
Ad

prashanth-saranசென்னை, மே 21- கிரிக்கெட் சூதாட்ட புகாரில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான பிரசாந்த், சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று சரணடைந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சென்னையில் சூளைமேடு ஹரீஸ்பஜாஜ், புரசைவாக்கம் நர்மத், ராஜா அண்ணாமலைபுரம் வேதாச்சலம், சவுகார்பேட்டை பப்புகவுதம், கீழ்ப்பாக்கம் தீபக்பஜாஜ், சுனில்பஜன்லால் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 6 பேரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

iplசிபிசிஐடி போலீஸ் டிஜிபி நரேந்திரபால்சிங், ஐஜி மஞ்சுநாதா ஆகியோரின் நேரடி மேற்பார்வையில், சூப்பிரண்டு பெருமாள் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாசீனிவாஸ், ஜெயச்சந்திரன், அரவிந்தன் மற்றும் 6 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற் கிடையில், நேற்று தனது வக்கீலுடன் சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு வந்து பிரசாந்த் சரண் அடைந்தார்.

#TamilSchoolmychoice

இதையடுத்து பிரசாந்த் தம்பி விபுல் முன்னிலையில் அயனாவரம், மேடவாக்கம் டேங்க் சாலையில் உள்ள அவரது வீட்டை நேற்று பிற்பகல் சிபிசிஐடி போலீஸ் டிஎஸ்பி ராஜா சீனிவாசன் தலைமையிலான 5 போலீசார் திறந்தனர். 3.30 மணி அளவில் வீட்டுக்குள் புகுந்த போலீசார், வீடு முழுவதும் சோதனையிட்டனர். மாலை 6.30 மணி வரை சோதனை நடந்தது.

இதுகுறித்து சிபிசிஐடி டிஎஸ்பி ராஜா சீனிவாசன் கூறுகையில், ‘கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர் பிரசாந்த் வீட்டில் கோர்ட் அனுமதியுடன் சோதனை செய்தோம். 3 மணி நேரம் தொடர்ந்த இந்த சோதனையில் 2 மடிகணினி, ஒரு அடையாள அட்டை, டைரி, சூதாட்டம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியது. ‘பாஸ்வேர்டு’ எண் தெரியாததால் மடி கணினி  திறந்து ஆய்வு செய்ய முடியவில்லை.

இதனால் அதில் என்னென்ன விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை அறியமுடியவில்லை. பிராந்த் மூலம் ‘பாஸ்வேர்டு’ தெரிந்து  மடி கணினியை திறந்து ஆய்வு செய்ய உள்ளோம். அதில் பதிவாகியுள்ள விவரங்களை வைத்து யார் யாருக்கு சூதாட்டத்தில் தொடர்பு உள்ளது என்ற விவரம் தெரிய வரும்’ என்றார்.