Home அரசியல் முன்னாள் பூச்சோங் பிகேஆர் தலைவர் முரளிக்கு 18 மாத சிறை தண்டனை!

முன்னாள் பூச்சோங் பிகேஆர் தலைவர் முரளிக்கு 18 மாத சிறை தண்டனை!

508
0
SHARE
Ad
Untitled-1

பெட்டாலிங் ஜெயா, மே 23 – பள்ளி தலைமை ஆசிரியை ஒருவரை  தனது பணியை செய்ய விடாமல் தடுத்து அவரை மிரட்டிய குற்றத்திற்காக முன்னாள் பூச்சோங் தொகுதி பிகேஆர் தலைவர் எஸ்.முரளிக்கு(வயது 45) நீதிமன்றத்தில் இன்று 18 மாத சிறை தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியையான கே.ஜி.சரஸ்வதி (வயது 53) என்பவரை பள்ளி தலைமை ஆசிரியை அறையில், பிற்பகல் 12.50 மணியளவில் அவரது பணியை செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக முரளிக்கு குற்றவியல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 18 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முரளி அபராதமாக 3000 ரிங்கிட் செலுத்தப்பட வேண்டும் என்றும் அப்படி செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதம் தண்டனை நீடிக்கும் என்றும் நீதிபதி நோர் அபிதா இட்ரிஸ் தீர்ப்பு வழங்கினார்.

#TamilSchoolmychoice

முரளி சார்பாக அவரது வழக்கறிஞர் எஸ்.செல்வம் வாதாடினார்.