Home நாடு எதிர் கட்சிகளின் பத்திரிக்கைகள் உள்துறை அமைச்சால் பறிமுதல்!

எதிர் கட்சிகளின் பத்திரிக்கைகள் உள்துறை அமைச்சால் பறிமுதல்!

582
0
SHARE
Ad

Harakah-Featureபுத்ரா ஜெயா, மே 23 – எதிர் கட்சிகளால் நடத்தப்படும் பத்திரிக்கைகளை அவை, உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் விநியோகிக்கப்படுவதாகக் கூறி உள்துறை அமைச்சு நாட்டின் பல பகுதிகளில் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

#TamilSchoolmychoice

அச்சு மற்றும் அச்சக, பிரசுர சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளை அவை மீறியதாக உள்துறை அமைச்சு பறிமுதலுக்கான காரணமாகக் கூறியுள்ளது.

இந்த சட்டத்தின்படி, இந்த பத்திரிக்கைகள் உறுப்பினர்களுக்கு மட்டும் விநியோகிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை உள்துறை அமைச்சு விதித்திருந்தது.

“பிகேஆர் கட்சியின் வெளியீடான சுவாரா கெஅடிலான் பத்திரிக்கையின் 1,408 பிரதிகளும், பாஸ் கட்சியின் வெளியீடான ஹராக்கா பத்திரிக்கையின் 1,062 பிரதிகளும், ஜசெகவின் வெளியீடான ராக்கெட் பத்திரிக்கையில் 70 பிரதிகளும் நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது” என உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கு முன் விதிமுறைகள் மீறல் குறித்து பலமுறை அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டவிதிகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும், சட்டத்தை யாரும் மீறாமல் இருப்பதை உறுதி செய்யவும் இந்த பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் உள்துறை அமைச்சு விடுத்த அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

புதிதாக பொறுப்பேற்றவுடன் அரசாங்கம் பொதுமக்களுக்கு கூடுதலான ஜனநாயக உரிமைகளையும், சுதந்திரத்தையும் வழங்குவதற்கு பதிலாக இவ்வாறு கெடுபிடிகளையும், காவல் துறை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது பொதுவாக பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.