Home வணிகம்/தொழில் நுட்பம் ஸ்டார் பத்திரிக்கை – பினாங்கு அச்சக வசதிகளை மூடுகிறது

ஸ்டார் பத்திரிக்கை – பினாங்கு அச்சக வசதிகளை மூடுகிறது

1147
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டின் முன்னணி ஆங்கில நாளிதழான ஸ்டார் பினாங்கு பாயான் லெப்பாஸ் வளாகத்தில் அமைந்துள்ள தனது அச்சக வசதிகளை எதிர்வரும் செப்டம்பர் 2018 முதல் மூடவிருக்கிறது.

தனது செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக ஸ்டார் இந்த முடிவை எடுத்துள்ளது.

மிக அதிக எண்ணிக்கையிலான பத்திரிக்கை விற்பனையைத் தொடர்ந்து, பினாங்கு மற்றும் வட மாநிலங்களில் கோலாலம்பூரில் இருந்து பத்திரிக்கையை விநியோகிப்பதற்கு பதிலாக, பினாங்கிலேயே ஸ்டார் பத்திரிக்கையை அச்சடித்து வட மாநிலங்களுக்கு அனுப்பும் விதமாக பல ஆண்டுகளுக்கு முன்னர் பினாங்கில் அச்சக வசதிகளை ஸ்டார் நிறுவனம் ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

எனினும் தற்போது டிஜிடல் எனப்படும் மின்னியல் ஊடகத்தில் கவனம் செலுத்தும் வணிக வியூகம், செலவினங்களைக் குறைப்பது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் தனது பினாங்கு அச்சக வசதிகளை மூடும் இந்த முடிவை ஸ்டார் எடுத்துள்ளது.

இதன் காரணமாக, சுமார் 100 ஊழியர்கள் தங்கள் பணிகளில் இருந்து வேலை நிறுத்தம் செய்யப்படுவர்.

எனினும், பினாங்கு உள்ளிட்ட வட மாநிலங்களில் ஸ்டார் பத்திரிக்கையின் சுமுகமான விநியோகம் இந்த நடவடிக்கையால் எந்தவிதத்திலும் பாதிப்படையாது என்றும், வட மாநிலங்கள் குறித்த செய்திகள், தகவல்கள் ஸ்டார் பத்திரிக்கையில் தொடர்ந்து இடம் பெறுவதும் குறையாது என்றும் ஸ்டார் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அச்சுப் பத்திரிக்கைகளின் விற்பனை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதைத் தொடர்ந்து, ஸ்டார் போன்ற ஊடகங்களும் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கின்றன. அதன் விளைவே, பினாங்கிலுள்ள அச்சக வசதிகளை மூடும் முடிவு எனவும் கருதப்படுகிறது.