அதே வேளையில் கைப்பற்றப்பட்ட விலையுயர்ந்த ஆபரணங்கள், நவரத்தினக் கற்கள் ஆகியவற்றின் மதிப்பு 200 மில்லியன் ரிங்கிட்டையும் தாண்டும் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆபரணங்களைத் தர மதிப்பீடு செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவற்றின் உண்மையான மதிப்பு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இன்று வியாழக்கிழமை காலையில் நஜிப் துன் ரசாக் மீண்டும் புத்ரா ஜெயா ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்து தனது வாக்குமூலத்தைத் தரவிருக்கிறார்.
Comments