Home நாடு அப்துல் அசிஸ்: கைப்பற்றப்பட்டது 9 இலட்சம் ரிங்கிட்!

அப்துல் அசிஸ்: கைப்பற்றப்பட்டது 9 இலட்சம் ரிங்கிட்!

1216
0
SHARE
Ad
அப்துல் அசிஸ் அப்துல் ரகிம்

கோலாலம்பூர் – அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் இல்லங்கள் மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் இதுவரையில் 5 இலட்சம் ரிங்கிட் பணம் ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டிருக்கிறது என இதற்கு முன் வெளிவந்த தகவல்கள் தெரிவித்தன.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட இந்த சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணம், ஆகக் கடைசியான கணக்கெடுப்பின்படி 9 இலட்சம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

5 இலட்சம் ரிங்கிட் ரொக்கமாகக் கைப்பற்றப்பட்ட வேளையில், மற்ற அயல்நாட்டு நாணயங்களின் மதிப்பு 4 இலட்சம் ரிங்கிட்டைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

ரொக்கம் தவிர விலையுயர்ந்த கைக்கெடிகாரங்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை உண்மையான விலையுயர்ந்த கைக்கெடிகாரங்கள் அல்ல மாறாக போலியானவை என அப்துல் அசிஸ் தெரிவித்திருக்கிறார்.