Home நாடு தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அசிஸ் இல்லங்களில் 5 இலட்சம் ரிங்கிட் கைப்பற்றப்பட்டது

தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அசிஸ் இல்லங்களில் 5 இலட்சம் ரிங்கிட் கைப்பற்றப்பட்டது

835
0
SHARE
Ad
Datuk-Abdul-Azeez-Abdul-Rahim
அப்துல் அசிஸ் அப்துல் ரகிம்

கோலாலம்பூர் – அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் தாபோங் ஹாஜி எனப்படும் ஹஜ் யாத்திரைக்கான நிதி வாரியத்தின் தலைவருமான அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் இல்லங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் இதுவரையில் 5 இலட்சம் ரிங்கிட் பணம் ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

இந்த சோதனைகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டிருக்கிறது.

சுபாங் மற்றும் பாலிங் ஆகிய இடங்களிலும், துன் ரசாக்கிலுள்ள அப்துல் அசிசின் அலுவலகத்திலும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட இந்தப் பணம், பாலிங் தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் பொருட்டு பாலிங் அம்னோவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணம் என அப்துல் அசிஸ் விளக்கம் தந்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும் இந்தப் பணத்தில் ஒரு பகுதி பாலஸ்தீனத்தில் காசா பகுதிக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த குழுவுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் என்றும் அப்துல் அசிஸ் கூறியிருக்கிறார்.

ரொக்கம் தவிர கைக்கெடிகாரங்கள், அயல் நாட்டு நாணயத்திலான பணம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டிருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத் தலைவர் அசாம் பாக்கி தெரிவித்திருக்கிறார்.