Home தேர்தல்-14 புக்கிட் பிந்தாங்கில் கைப்பற்றப்பட்ட பெட்டிகள்: ரொக்கம் 120 மில்லியன் ரிங்கிட்!

புக்கிட் பிந்தாங்கில் கைப்பற்றப்பட்ட பெட்டிகள்: ரொக்கம் 120 மில்லியன் ரிங்கிட்!

1047
0
SHARE
Ad
பெவிலியன் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் பெட்டிகளில்…

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்கள் எனக் கருதப்படும் புக்கிட் பிந்தாங்கிலுள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கைப்பற்றப்பட்ட பெட்டிகளில் இருந்த ரொக்கப் பணம் எண்ணி முடிக்கப்பட்டிருப்பதாக காவல் துறை அறிவித்திருக்கிறது.

டிவி 3 தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்ட செய்தியின்படி அந்தப் பெட்டிகளில் இருந்த ரொக்கப் பணத்தின் மொத்த மதிப்பு 120 மில்லியன் என காவல் துறை தெரிவித்திருக்கிறது.

காவல் துறை அதிகாரிகள், பேங்க் நெகாரா ஊழியர்களின் உதவியுடன் இந்த ரொக்கப் பணத்தை எண்ணி முடித்திருக்கின்றனர். திங்கட்கிழமை (மே 21) தொடங்கி மூன்று நாட்களாக இரவு பகலாக இந்தப் பணம் எண்ணப்பட்டு வந்தது.

#TamilSchoolmychoice

இந்தப் பணம் தற்போது பேங்க் நெகாராவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டிருக்கிறது.

ரொக்கப் பணம் தவிர ஆடம்பர, விலையுயர்ந்த பெண்களுக்கான கைப்பைகளின் மதிப்பு என்னவென்று இதுவரை காவல் துறை தெரிவிக்கவில்லை.