Home தேர்தல்-14 அப்துல் அசிஸ்: தாபோங் ஹாஜி தலைவர் பதவியில் இருந்து விலகினார்!

அப்துல் அசிஸ்: தாபோங் ஹாஜி தலைவர் பதவியில் இருந்து விலகினார்!

1181
0
SHARE
Ad
அப்துல் அசிஸ் அப்துல் ரகிம்

கோலாலம்பூர் –  தாபோங் ஹாஜி எனப்படும் ஹஜ் யாத்திரைக்கான நிதி வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரகிம் விலகியுள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை அவர் கடந்த மே 14-ஆம் தேதி சமர்ப்பித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் தலைவர் பதவிக்கான அவரது நியமனம் முடிவுக்கு வர இருந்த நிலையில் அப்துல் அசிஸ் பதவி விலகியுள்ளார்.

#TamilSchoolmychoice

அவரது இல்லங்களிலும், அலுவலகத்திலும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நடத்திய அதிரடி சோதனைகளில் இதுவரையில் 5 இலட்சம் ரிங்கிட் பணம் ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டிருக்கிறது என அந்த ஆணையம் அறிவித்துள்ளது.

அப்துல் அசிஸ் அம்னோ உச்சமன்ற உறுப்பினருமாவார்.

தாபோங் ஹாஜி நிதி வாரியம் உள்ளிட்ட அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்களில் அரசியல்வாதிகள் நியமிக்கப்படக் கூடாது என்ற புதிய அரசாங்கத்தின் முடிவைத் தான் மதிப்பதாகவும் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

14-வது பொதுத் தேர்தலில் பாலிங் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட அப்துல் அசிஸ் 1,074 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

NEGERI KEDAH
Parlimen P.016 – BALING
PARTI MENANG BN
MAJORITI UNDI 1074
NAMA PADA KERTAS UNDI BIL. UNDI
USTAZ HASSAN BIN SAAD (PAS) 37483
MOHD TAUFIK BIN HJ YAACOB (PKR) 14472
DATUK AZEEZ RAHIM (BN) 38557

 

அண்மையில், பினாங்கு கடலடி சுரங்கப் பாதை விவகாரம் குறித்த விசாரணைகள் தொடர்பான சர்ச்சைகளிலும் அப்துல் அசிஸ் பெயர் சம்பந்தப்படுத்தப்பட்டது.