Home நாடு பினாங்கு கடலடிப் பாதை – அப்துல் அசிசுக்கு சம்பந்தமில்லை

பினாங்கு கடலடிப் பாதை – அப்துல் அசிசுக்கு சம்பந்தமில்லை

950
0
SHARE
Ad
பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகிம்

புத்ரா ஜெயா – பினாங்கு கடலடி சுரங்கப் பாதை விவகாரத்தில் பாலிங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் சம்பந்தப்படவில்லை என ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

“நாங்கள் கைப்பற்றிய ஆவணங்களை நன்கு பரிசோதித்ததில் இந்த விவகாரத்தில் 3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக அப்துல் அசிஸ் மீது எழுந்த குற்றச்சாட்டுகளின் விசாரணையை நாங்கள் நிறுத்தியுள்ளோம்” என ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை தலைமை ஆணையர் அசாம் பாக்கி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

பினாங்கு கடலடிப் பாதை குத்தகையைப் பெற்ற செனித் கொன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம் அம்னோவின் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் ரஹிமுக்கு எதிராக அனுப்பியிருந்த சட்ட நடவடிக்கைக் கடிதத்தை அண்மையில் மீட்டுக் கொண்டது.

#TamilSchoolmychoice

அப்துல் அசிஸ் 3 மில்லியன் பெற்றதாகக் கூறி, அதற்குரிய ஆலோசனைப் பணிகளை அவர் வழங்காத காரணத்தால் அந்தப் பணத்தைத் திரும்ப செலுத்த வேண்டும் என செனித் நிறுவனம் பிப்ரவரி 24-ஆம் தேதி அந்தச் சட்டக் கடிதத்தை அனுப்பியிருந்தது.

அதைத் தொடர்ந்து ஷா ஆலாம் காவல் நிலையத்தில் அப்துல் அசிஸ் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் விதமாக புகார் ஒன்றை செய்திருந்தார்.

அதன்பின்னர் தனக்கு கிடைக்கப்பெற்ற கடிதத்தில் தன்மீதான சட்ட நடவடிக்கைக் கடிதத்தை செனித் கொன்ஸ்ட்ரக்‌ஷன் மீட்டுக் கொள்வதாகவும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர்கள் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருக்கின்றனர் என்றும் அப்துல் அசிஸ் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையமும் அப்துல் அசிஸ் மீதான விசாரணையை நிறுத்திக் கொண்டுள்ளது.