Home நாடு பக்காத்தானின் தேர்தல் அறிக்கை – 100 நாட்களில் 10 வாக்குறுதிகள்!

பக்காத்தானின் தேர்தல் அறிக்கை – 100 நாட்களில் 10 வாக்குறுதிகள்!

898
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பொதுத் தேர்தலை முன்னிட்டு பல அம்சங்களில் விறுவிறுவென அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி, தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிடுவதில் முன்னணி வகிக்கிறது.

மக்களை ஈர்க்கும் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 14-வது பொதுத் தேர்தலுக்கான கொள்கை அறிக்கையை நாளை வியாழக்கிழமை இரவு துன் மகாதீர் தலைமையில் பக்காத்தான் கூட்டணி வெளியிடுகிறது.

அந்தத் தேர்தல் அறிக்கையின் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் பின்வருமாறு:

  • ஆட்சிக்கு வந்த உடன் முதல் 100 நாட்களுக்குள் 10 முக்கிய வாக்குறுதிகளை பக்காத்தான் நிறைவேற்றும்.
  • ஆட்சியில் இருக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்ற  100 வாக்குறுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • மாநில, மத்திய அளவில் பதவிகளுக்கு இரண்டு தவணைகள் மட்டுமே ஒருவர் பதவியில் நீடிக்க முடியும். அதன்படி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் மற்றும் மாநில மந்திரி பெசார்கள் இரண்டு தவணைகள் மட்டுமே பதவி வகிக்க முடியும்.
  • சபா, சரவாக் மாநிலங்களுக்கு கூடுதலான சுயாட்சி உரிமைகள் வழங்கப்படுகின்றன.
  • அரசு ஊழியர்களுக்கு மேலும் சுதந்திரமான சூழல் உருவாக்கப்படும்.
  • நாட்டின் முதன்மை அரசாங்க மையங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.