Home நாடு பத்தாங் காலி தமிழ்ப் பள்ளியில் பாலர் வகுப்பு கட்டடம் – நஜிப் திறந்து வைத்தார்

பத்தாங் காலி தமிழ்ப் பள்ளியில் பாலர் வகுப்பு கட்டடம் – நஜிப் திறந்து வைத்தார்

1179
0
SHARE
Ad

பத்தாங் காலி – சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு இன்று புதன்கிழமை வருகை மேற்கொண்ட பிரதமரும், தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பத்தாங் காலியில் நிர்மாணிக்கப்படும் பாலர் வகுப்புகளுக்கான கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட், கல்வி துணை அமைச்சரும் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ப.கமலநாதன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் அம்னோவின் தலைவரும் வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சரும் டான்ஸ்ரீ நோ ஓமாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice