Home இந்தியா தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு!

1407
0
SHARE
Ad

தூத்துக்குடி – தமிழகத்தின் தென்பகுதி நகரான தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொது மக்களை நோக்கி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.

 

மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்களை இந்தத் துப்பாக்கிச் சூடு தோற்றுவித்திருக்கிறது.

இந்த விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார்.