Home இந்தியா ராஜேந்திர பாலாஜி ஜாமீன் மனு ஜனவரி 12-இல் விசாரணை

ராஜேந்திர பாலாஜி ஜாமீன் மனு ஜனவரி 12-இல் விசாரணை

1084
0
SHARE
Ad
கே.டி.ராஜேந்திர பாலாஜி

சென்னை : மோசடிக் குற்றச்சாட்டுகளினால் கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி சிறைச்சாலையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தனக்கு ஜாமீன் வழங்க  வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜனவரி 12-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

பால்வளத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அதிரடிப் பேச்சுகளால் தமிழகத்தை அதிரவைத்தவர் ராஜேந்திர பாலாஜி!

#TamilSchoolmychoice

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 17ம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை அமைத்துத் தேடி வந்தது.

இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ராஜேந்திர பாலாஜி.

அந்த முன் ஜாமீன் மனு, கடந்த டிசம்பர் 17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நாளில், காரில் ஏறி தப்பிச் சென்று தலைமறைவானார்.

இதையடுத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பின்னர், கூடுதலாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாசான் மாவட்டத்தில் ராஜேந்திர பாலாஜி கடந்த ஜனவரி 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் திருச்சி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.