Home இந்தியா தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் துண்டிப்பு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் துண்டிப்பு!

1104
0
SHARE
Ad

தூத்துக்குடி – தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் உச்சத்தை எட்டியிருக்கிறது.

நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பலியாகியிருப்பதையடுத்து, தூத்துக்குடி மக்களின் போராட்டம் மேலும் அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் இன்று வியாழக்கிழமை துண்டிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதி கடந்த மார்ச் 31-ம் தேதியோடு முடிவடைந்த நிலையில், அதனைப் புதுப்பிக்க ஆலை நிர்வாகம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்திருந்தது.

எனினும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதற்கு அனுமதி மறுத்து மின்சாரத்தைத் துண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.