புது டில்லி: தூத்துக்குடியில் இரண்டாவது ஏவுதளம் அமைப்பதற்கான நில கையகப்படுத்தும் பணி நடந்து வருவதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன், நேற்று புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது தெரிவித்தார்.
இது குறித்து பேசிய கே.சிவன், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி ஏழுதளம் தவிர, இரண்டாவதாக நிலம் கையகப்படுத்துதல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
முக்கியமாக எஸ்எஸ்எல்விகளை (சிறிய செயற்கைக்கோள் வெளியீட்டு வாகனம்) அத்தளத்தில் அறிமுகப்படுத்த பயன்படும் என்பதைக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் பெரிய வகைகளுக்கு இது விரிவாக்கப்படலாம் என்து தெரிவித்தார்.