இயக்குனர் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து, அவர் நடிகர் விஜய்யை வைத்து இயக்கி வரும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி பரவலாகி வருகிறது. இப்படத்திற்கு ‘மாஸ்டர்‘ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த முதல் தோற்றத்தில், ஏப்ரல் மாதம் படம் வெளியீடு என குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments