Home நாடு ஹராப்பான் அமைச்சர்கள் சொத்துக் கணக்குகளை வெளியிடுவார்கள்: வான் அசிசா

ஹராப்பான் அமைச்சர்கள் சொத்துக் கணக்குகளை வெளியிடுவார்கள்: வான் அசிசா

988
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பான் அமைச்சர்களும், துணையமைச்சர்களும் தங்களது சொத்து கணக்குகளை பகிரங்கமாக வெளியிடுவார்கள் என துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் இன்று வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்கள் வான் அசிசாவிடம் கேட்டதற்கு, “ஆமாம்.. எங்களுடைய ஆட்சியில் இதுவும் ஒரு அங்கம் தான்” என மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சருமான வான் அசிசா தெரிவித்தார்.