Home நாடு 1.5 மில்லியன் வங்கதேசத் தொழிலாளர்கள் ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்படும்: குலசேகரன்

1.5 மில்லியன் வங்கதேசத் தொழிலாளர்கள் ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்படும்: குலசேகரன்

2345
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வங்காள தேசத்திலிருந்து 1.5 மில்லியன் தொழிலாளர்களை மலேசியாவில் பணியில் அமர்த்துவதற்கு, முந்தைய பாரிசான் அரசாங்கத்தால் கடந்த 2016 செய்யப்பட்ட ஒப்பந்தத்தை புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசு மறுஆய்வு செய்யும் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறியிருக்கிறார்.

மலேசியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் திட்டங்களில் ஒன்று என கோலாலம்பூரில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் குலசேகரன் தெரிவித்திருக்கிறார்.

“தேவைக்கேற்ற வகையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துவோம். ஆனால் நமது தொழிலாளர்களுக்கே முதலில் முன்னுரிமை. மலேசியர்களுக்கு முன்னுரிமை கொடுத்த பின்பே மற்றவர்களுக்கு.

#TamilSchoolmychoice

“மற்ற நாட்டு அரசாங்கங்களுடன் செய்யப்பட்டிருக்கும் அனைத்து ஒப்பந்தங்களும், புரிந்துணர்வுகளும் மறு ஆய்வு செய்யப்படும். இதை தான் அவரும் (பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது) கூறியிருக்கிறார்” என குலசேகரன்  தெரிவித்திருக்கிறார்.